(முஹம்மட் சிஜாம்)
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம். பரீட் அவர்களின் தலைமையில் 2025.12.15 ஆம் திகதி நிந்தவூர் மதீனா பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான குழு விளையாட்டு மற்றும் படைப்புத்திறன்களை வளர்த்து அதன் மூலம் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதுடன் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதை பொருளை திசை திருப்பும் முறைகள் தொடர்பாக கலந்துரையாடல் மற்றும் சமூக உளவளத்துணை என்ற தொணிப்பொருளில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமான ஏம். அப்துல் லத்தீப், அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ,டபிள்யூ கங்கா சாகரிக்கா, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எம் சிறிவர்த்தன, நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் ஒய்வு பெற்ற முன்னால் அதிபர் ஏ.எல் நிஜிமுத்தீன், நிந்தவூர் மதீனா பாடசாலையில் அதிபர் எம்.எச்.எம் முஹம்மட் ராபிஉ , அட்டாளைச்சேனை இளைஞர் சேவை அதிகாரி எம்.எஸ்.எம் ரசீன், சிரேஷ்ட நிந்தவூர் பொது சுகாதார பரிசோதகர் எம், பைசால், ஆசியர் முஹம்மட் இஸ்மத், மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்களுக்கு “சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment