• Latest News

    December 22, 2025

    கொழும்பு நகரம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு

     நுகேகொடை மற்றும் கொஹுவல சந்திப்புக்கு இடையில் இன்று இரவு (22.12.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்பு நகரம் முழுவதும் பொலிஸார் கூடுதல் உத்தியோகத்தர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 25 வயதுடைய இளைஞர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக கொழும்பு களுபொவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவத்துக்குப் பொறுப்பான சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் தப்பிச் செல்கிறார் என்பதால், பொலிஸார் களனி பாலம் வரையிலான பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபரை தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த பகுதிகளில் பயணிக்கும் போது அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

    சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பு நகரம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top