அம்பாறை மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் (13.06.2023) இன்று உயர்தர மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நிந்தவூர் கமு/ அல் மதினா தேசிய பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
இங்கு பாவனையாளர் உரிமைகள், பொறுப்புகள், சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் பொருட்கள் கொள்வனவின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வளவாளராக புலன் விசாரணை அதிகாரி திரு. இஷட்.எம் ஸாஜீத், திரு. ஏ.ஏ.ஏ சர்பான், திரு.எம்.எம்.எம் இர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment