• Latest News

    June 19, 2023

    கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு தீர்வு - ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை

    கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!

    கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமதொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
     


    அண்மையில்  உரப்பற்றாக்குறையால் தமது விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் மூன்று மாவட்ட விவசாயிகளும் கோரிக்கை முன்வைத்தனர்.

    விவசாயிகள் முவைத்த கோரிக்கைக்கு அமைவாக,விரைவாக உரிய தீர்வு பெற்றுத்தரப்படுமென விவசாயிகளுக்கு வாக்குறுதியளித்திருந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசென்றதுடன் உரப் பற்றாக்குறைக்கு தீர்வையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

     அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய உரத்தை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை கமதொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

    பல காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் உடனடி தீர்வு வழங்கப்பட்டது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு தீர்வு - ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top