• Latest News

    June 22, 2023

    மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவின் கூரை திடீரென்று உடைந்து வீழ்ந்தது. மக்கள் பரபரப்பு

     மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் இன்றைய தினம்  (22.06.2023) அவசர சிகிச்சை பிரிவு அறையின் கூரை உடைந்து வீழ்ந்ததில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதன் போது குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    கூரையின் மேல் தளத்தில் இருந்து குரங்கு பாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மக்கள் கோரிக்கை

    எனினும் குறித்த மேற்கூரையானது புதிதாக நிர்மாணிக்கப்பட்டது எனவும், இதன் நிர்மாணம் தரமற்றது எனவும் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

    வைத்தியசாலை நிர்வாகம் அசமந்த போக்கே காரணம் என வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்தவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுக்கு வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தில் இது போல் தரமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளை ஆராய்ந்து அவற்றை திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவின் கூரை திடீரென்று உடைந்து வீழ்ந்தது. மக்கள் பரபரப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top