(ஏ.எம்.அஸ்லம்)
காலம்சென்ற
சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தொடர்பான நினைவேந்தல் நிகழ்வு நேற்று
திங்கட்கிழமை (19) மாலை, கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய மண்டபத்தில்
நடைபெற்றது.
மர்ஹூம்
வை.எல்.எஸ்.ஹமீட் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரிடம்
கல்வி கற்ற மாணவிகள் குழுவொன்றினால் இந்நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
கல்முனை
மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சிரேஷ் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர்
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நினைவுப் பேருரையை கல்முனை மஹ்மூத்
மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீர் நிகழ்த்தினார்.
அத்துடன்
அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எச்.ஆர். மஜீதியா மற்றும் காமிலா
காரியப்பர் ஆகியோர் நினைவுக் கவிதை வாசித்தனர். காத்தான்குடி ஸாவியா மகளிர்
கல்லூரியின் பிரதி அதிபர் எம்.வை.எம்.இம்ரான், வை.எல்.எஸ்.ஹமீதின் பொது
வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தொகுப்புரையை
நிகழ்த்தினார்.
அல்ஹாபிழ்
எம்.ஐ.எம்.றியாஸ் மெளலவி விஷேட துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார்.
வை.எல்.எஸ்.ஹமீதின் குடும்பத்தினர் சார்பில் அவரது இளைய சகோதரரான டாக்டர்
வை.எல்.எம்.யூசுப் ஏற்புரை நிகழ்த்தினார்.
0 comments:
Post a Comment