• Latest News

    June 27, 2023

    இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

     (எம்.ஜே.எம். சஜீத்)

    நாடெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான சமூர்த்தி பயனாளிகள் திட்டமிட்ட முறையில் சில அதிகார தரப்பினரால் பெயர் நீக்கப்பட்டுள்ளமையினால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி உதவிச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார். 

    அத்தோடு, இது பெரும் அநீதி எனவும் மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடும் இந்த மோசமான செயலை செய்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இம்ரான் எம்.பி. கோரிக்கை விடுத்தார். 

    இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

    நாடு முழுவதும் இலட்சக்கணக்கான ஏழை மக்கள் சமூர்த்திக் கொடுப்பணவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும், சில அதிகார பின்புலத்திலுள்ளவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இந்த பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 

    நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும்நிலையில் அப்பாவி ஏழை மக்களும் வயிற்றுப் பசியை போக்க பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர். அவர்களுக்கு சமூர்த்திக் கொடுப்பணவு ஆறுதலாக இருந்தது. எனினும், சிலர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இவர்களின் சமூர்த்திக் கொடுப்பணவை நிறுத்துவதற்கு பின்புலத்திலிருக்கின்றனர். மக்களை பற்றி சிந்திக்காத அதிகரிகள் பலரும் இந்த அநியாயத்திற்கு துணைபோயுள்ளனர். 

    சமூர்த்திக் கொடுப்பணவு பெறுபவர்களே அரசாங்கத்தால் தற்போது வழங்கப்படும் ஒரு சில சலுகைகளை பெற தகுதியுள்ளவர்களாக கணிக்கப்படுகின்றனர். எனினும், கூடுதலான பயணாளிகளின் பெயரை நீக்கியமையால் அவர்கள் சலுகைகளை பெற்றுக் கொள்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக அதிகர தரப்பு அநியாயமாக பட்டினிப் போராட்டத்தை முடக்கிவிட்டுள்ளது. இதனால், அந்த மக்களின் வறுமை நிலைமை மேலும் அதிகரிக்க அரசாங்கம் காரணமாக இருக்கின்றது.

    இதனால், அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே மக்கள் இன்று வீதிக்கு இறங்கி தமக்கு இழைக்கப்பட்டுள் அநியாயத்துக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். 

    அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு நாமும் வலு சேர்க்கவுள்ளோம். அத்தோடு, இதுவிடயத்தில் கண்மூடித்தனமாக நடந்துகொள்ளும் அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்.
    --
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top