• Latest News

    July 15, 2023

    சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளது! 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு

    சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று (15.07.2023) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

    குறித்த நிறுவனம் நாட்டில் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் திறக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை முதலீட்டுச் சபையுடன் எரிபொருள் விநியோகத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

    இலங்கையில் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மேற்கொள்வதற்கான ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளது! 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top