• Latest News

    July 30, 2023

    சிறுநீரகங்கள் அகற்றப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் : விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்கிறார் லேடி ரிட்ஜ்வே வைத்­தி­ய­சா­லை பணிப்­பாளர்

    (எம்.வை.எம். சியாம்)

    முஹம்­மது ஹம்தி எனும் சிறு­வ­னுக்கு ஏற்­பட்ட நிலை தொடர்பில் விசா­ர­ணை நடத்த உத்­த­ர­வி­டப்பட்­டுள்­ள­தாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் ஜீ. விஜ­ய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

    இது தொடர்­பாக அவர் தெரி­விக்­கையில்,

    செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்­துடன் பிறப்­பி­லேயே மற்­றைய சிறு­நீ­ரகம் ஒட்­டி­யி­ருந்­த­தா­லேயே மற்­றைய சிறு­நீ­ர­கமும் செய­லிழந்­தி­ருக்கும் என நான் எண்­ணு­கிறேன். அதன் கார­ண­மா­கவே செய­லி­ழந்த சிறு­நீ­ர­கத்தை அகற்றும்போது மற்­றைய சிறு­நீ­ர­கமும் நீக்­கப்­பட்­டுள்­ளது. 

    இந்த விடயத்தில் சிறுவனின் பெற்­றோ­ரி­ட­மி­ருந்து எனக்கு எவ்­வித முறைப்­பாடும் கிடைக்­க­வில்லை.

    மேலும், சத்­திர சிகிச்சை மேற்­கொண்டு 7 மாதங்கள் கடந்­துள்­ளன. 

    இந்­நி­லையில், இந்த சத்­திர சிகிச்சை மேற்கொண்ட விசேட சத்­திர சிகிச்சை நிபுணர் தற்­போது நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ளார்.

    இருப்­பினும், அதன் பின்னர் சிகிச்சைகளை மேற்­கொண்ட வைத்­தி­யர்­க­ளிடம் வாக்­கு­மூ­லங்­களை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு நான் பிரதிப் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன் என்றார்.

    இதே­வேளை, பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ணைகள் மூலம் சிறுவன் தொடர்பில் இடம்­பெற்ற அனைத்து விட­யங்­களும் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும் என அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்­கத்தின் ஊடகப் பேச்­சாளர் வைத்­தியர் சம்மில் விஜே­சிங்க தெரி­வித்தார்.

    அவர் மேலும் இது தொடர்பில் கூறுகையில்,

    இவை தனித்து எடுத்த தீர்­மா­னங்கள் அல்ல. சிறுவர் நோய் விசேட நிபு­ணர்கள், சிறு­நீ­ரகம் தொடர்­பான நிபு­ணர்கள், கதி­ரி­யக்­க­வி­ய­லா­ளர்கள் உள்­ளிட்ட பலரும் இத­னுடன் தொடர்புபட்­டுள்­ளார்கள். 

    மருத்­துவ அறிக்­கை­க­ளுக்கு ஏற்ப அனை­வரும் இணைந்தே இந்த தீர்­மா­னங்­களை எடுத்­துள்ளனர்.

    எனினும், பக்­க­ச்சார்­பற்ற விசா­ர­ணைகள் மூலம் இடம்­பெற்ற அனைத்து விட­யங்­களும் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும். சுகாதாரத்துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்கள் தொடர்பில் மக்களின் அதிருப்தியை இல்லாமல் செய்ய சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

    Virakesari - 





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுநீரகங்கள் அகற்றப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் : விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்கிறார் லேடி ரிட்ஜ்வே வைத்­தி­ய­சா­லை பணிப்­பாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top