• Latest News

    July 18, 2023

    மருந்து வகை சர்ச்சை: சுகாதார அமைச்சரை மாற்றுவது தீர்வாகாது - நாமல் ராஜபக்ஷ


     சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மாற்றி புதிய அமைச்சரை நியமிப்பது தீர்வாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    நாட்டில் மருந்து வகைகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமைகள் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.  

    சுகாதாரத்துறையில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்த பிரச்சினை தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இது முதல் தடவையல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர்களை பதவி மாற்றம் செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருந்து வகை சர்ச்சை: சுகாதார அமைச்சரை மாற்றுவது தீர்வாகாது - நாமல் ராஜபக்ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top