பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபை கடைத் தொகுதியின் கூரைத் தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதினால் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
.இதனையடுத்து புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் புத்தளம் நகரசபை ஊழியர்கள் இணைந்து திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.


0 comments:
Post a Comment