• Latest News

    July 31, 2023

    இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது! பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

    இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


    இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 348 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். 

    இதேவேளை, ஒரு லீட்டர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.

    லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது! பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top