• Latest News

    November 02, 2023

    சவூதி அரேபியாவும், இஸ்ரேலும் ஒரே கொள்கையில் நற்புடன் பயனிக்கின்றதா ?


    மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள பாலஸ்தீன புனித பூமியை யூதர்களிடமிருந்து மீட்பதற்காக சில இஸ்லாமிய நாடுகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றது. அதில் ஈரான் பிரதானமானது.

    இராஜதந்திர பொறிக்குள் சிக்குகின்ற இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களை நம்பாமல் யூதர்களை சுற்றிலும் ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ், இஸ்லாமிக் ஜி..ஹாத் போன்ற பல இயக்கங்களை பயிற்றுவித்து அவர்களுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை ஈரான் நீண்டகாலமாக வழங்கிவருகின்றது.  

    இஸ்லாமியர்களின் இரண்டு புனித தளங்களின் காவலர்களான சவூதி அரேபியாவானது யூதர்களுடன் போரிடுகின்ற இயக்கங்களுக்கு எந்தவித உதவிகளும் செய்ததில்லை. மாறாக அவர்களை அழித்தொழிக்கின்ற சக்திகளுக்கு சவூதி அரேபியா எப்போதும் துணைபோனதுதான் வரலாறு.

    யூத தேசத்தினை அங்கீகரிக்காமலும், அமெரிக்காவுக்கு அடிபணியாமலும் இறுக்கமான போக்கினை கடைப்பிடிப்பதுமே ஹமாஸ் இயக்கம் மீது சவூதி அரசு வெறுப்பாக இருப்பதற்கு காரணம் என்று கூறலாம்.  

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டார் நாட்டுக்கு எதிராக திடீரென சவூதி அரேபியாவும் அதன் நேச நாடுகளான எமிரேட்ஸ், பஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார தடையினை விதித்து கட்டாரை தனிமைப்படுத்தியது.

    இந்த பொருளாதார தடைக்காக இவர்களால் முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டானது உலகில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு கட்டார் அரசு உதவி வருகின்றது என்றும், குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக போரிடுகின்ற ஹமாஸ் இயக்கத்திற்கு நிதி உதவி செய்து வருவதுடன், ஹமாஸ் இயக்கத்தின் தலைமை செயலகம் கட்டாரில் இயங்கி வருகின்றதென்பதுதான் இவர்களது பிரதான குற்றச்சாட்டாகும்.

    சற்றும் எதிர்பாராத இந்த திடீர் பொருளாதார தடை விதிப்பினால் கட்டார் சிறுது நிலைகுலைந்தது. உடனடியாக அந்நாட்டுக்கு உதவுவதற்காக ஈரான், துருக்கி போன்ற நாடுகள் முன்வந்து செயலில் இறங்கின. இதனை சவூதி அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    சவூதி அரேபியா தலைமையிலான இந்த செயல்பாடானது உயிர் நண்பன் அமெரிக்காவையும், கள்ள உறவினை பேணிவருகின்ற இஸ்ரேலையும் திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கையாக இருக்கலாம்.     

    மத்தியகிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத்தளம் அப்போது கட்டாரில் இருந்தது. அப்படியிருந்தும் சவூதி, கட்டார் ஆகிய நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலையின்போது நடுநிலை வகிக்காமல் இன்று இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவது போன்று அன்று நேரடியாக சவூதி அரசுக்கே அமேரிக்கா தனது ஆதரவினை வழங்கியது.

    சியோனிஸ்டுகளின் அடக்குமுறைக்கு எதிராகவும், புனித பூமியை மீட்பதற்காகவும், தங்கள் உயிர்களை தியாகம் செய்து புனித போர் செய்துவருகின்ற இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாதிகள் என்று பட்டியலிட்டு அவர்களை தடை செய்ததுடன், இராணுவ நடவடிக்கை மூலமாக அவர்களை அழிக்க முற்படுகின்றனர்.  

    இஸ்ரேலின் நிலைப்பாட்டிலேயே சவூதி அரசும் உள்ளது. அவ்வாறாயின், சவூதி அரசுக்கும், இஸ்லாமியர்களின் எதிரிகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவித வேறுபாடுகளும் கிடையாது.

    அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் எண்ணங்களை சவூதி அரச குடும்பத்தினர் நிறைவேற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று ஹமாஸ் இயக்கத்தை அழிக்கின்றோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த பாலஸ்தீன முஸ்லிம்களை அழித்துவருகின்ற நிலையில் அதற்கு எதிராக எதனையும் செய்வதற்கு திராணியற்ற இவர்கள் மாநாடுகளை கூட்டி வெற்று அறிக்கைகளை மாத்திரம் விடுவதனை தவிர வேறு எதனை செய்திட முடியும் ?   
    யேமன் நாட்டில் தனது பொம்மை ஆட்சிக்கு எதிராக ஹௌதி இயக்கத்தின் அன்சார் அல்லாஹ் போராளிகள் கிளர்ந்தெழுந்தபோது போராளிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில், இன்று காசாவில் அப்பாவி மக்கள்மீது இஸ்ரேல் விமானக்குண்டு வீசிவது போன்று பல வருடங்கள் சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான விமானக்குண்டு வீச்சினால் யேமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.

    எனவே சகோதர இஸ்லாமியர்களை யேமனில் கொலை செய்த சவூதி ஆட்சியாளர்களுக்கு காசாவில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது ஒரு பாரதூரமான விடையமாக இருக்கப்போவதில்லை.     
    முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சவூதி அரேபியாவும், இஸ்ரேலும் ஒரே கொள்கையில் நற்புடன் பயனிக்கின்றதா ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top