• Latest News

    December 27, 2023

    மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு துஆ பிரார்த்தனை - மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள் பங்கேற்பு

     நூருல் ஹுதா உமர் - 

    சுனாமிப்பேரலையில் உயிரிழந்த மக்களுக்காக மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் 19 வது வருடமாகவும் ஏற்பாடு செய்த துஆ பிராத்தனையும், நினைவுரையும், குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் சுனாமி தினமான இன்று (26)  மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. 

    மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஏ.பௌசர் அவர்களின் வழிகாட்டலில் உப தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில்  மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) தலைமையிலான உலமாக்கள், மதரஸா மாணவர்கள் கலந்து கொண்டு துஆ பிராத்தனை, நினைவுரை, குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வு ஆகியவற்றை மேற் கொண்டனர். 

     

    மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் உப செயலாளர் யூ.எல்.என் ஹுதா நெறிப்படுத்திய இந்நிகழ்வில் உலமாக்கள், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை செயலாளர் ஏ.சுந்தரகுமார், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை ஓய்வுபெற்ற அதிபர் சட்டத்தரணி எம்.சி.ஆதம்பாவா, மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம் உட்பட கல்விமான்கள், மதரஸத்துல் இர்ஸாதிய்யா மாணவர்கள், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எப்.எம். ரௌபி, பொருளாளர் ஏ.எல்.எம். றிபாஸ், ஆலோசகர் ஐ. இஸ்திகார் உட்பட நம்பிக்கையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

    அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து மதரஸத்துல் இர்ஸாதிய்யா மற்றும் கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய மாணவர்கள் அடங்களாக  204 பேர் கடந்த சுனாமி பேரலையில் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு துஆ பிரார்த்தனை - மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள் பங்கேற்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top