• Latest News

    January 22, 2024

    பெலியத்தை துப்பாக்கி கூட்டு சம்பவத்தை விசாரிக்க 06 பொலிஸ் குழுக்கள் நியமனம்


     பெலியத்தை பிரதேசத்தில் இன்று (22) காலை ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

    தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழும் தென் மாகாண குற்றப் பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் கீழும் இந்த பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    குறித்த சம்பவம் தொடர்பில் இந்த பொலிஸ் குழுக்கள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பெலியத்தை துப்பாக்கி கூட்டு சம்பவத்தை விசாரிக்க 06 பொலிஸ் குழுக்கள் நியமனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top