• Latest News

    January 07, 2024

    21 வயதுக்குள் பட்டம் பெறும் வகையில் கல்வித் திட்டம் மாற்றப்படவேண்டும் - கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸ் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் தெரிவிப்பு

     


    நமது நாட்டில் காணப்படும் கல்வி முறையில் உடனடி மாற்றங்களை செய்ய வேண்டும். ஒரு மாணவன் தனது முதல் பட்டப்படிப்பை 21 வயதுக்குள் நிறைவு செய்து ஒரு தொழிலை உருவாக்கி 10 பேருக்கு தொழில் வழங்கும் அளவிற்கு கல்வித் திட்டங்கள் மாற்றம் பெற வேண்டும்.

    இவ்வாறு தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற (06.01.2024) உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் தேசிய ரீதியான பொது மக்கள் கருத்தறியும் கூட்டத்தில் கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸ்  தெரிவித்தார்.

    இன்று உலகம் மாறிவிட்டது அதற்கேற்றால் போல் நாமும் மாறவேண்டும். ஒருகாலம் இருந்தது தலைவர்கள் கட்டளை பிறப்பிப்பவர்களாக இருந்தனர். இன்று தலைவர்கள் நல்லதொரு coach என   உருவாக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள்  எந்த இடத்தில் யாரை நியமிக்க வேண்டும் என தீர்மானிக்கின்றனர். முன்னர் தனி ஒருவர் தீர்மானங்களை மேற்கொண்டார். இன்று ஒரு குழு இருந்து தீர்மானங்களை மேற்கொள்ளும்  முறைக்கு உலகம் மாறிவிட்டது.

    அதனடிப்படையில் மக்களிடமிருந்தும் கருத்துக்களை எடுத்து சட்டங்களை இயற்றுவதற்கு அரசு இப்போதாவது எத்தனித்துள்ளமையினை இட்டு சந்தோசமடைகின்றோம்.

     ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு தொகை மாணவர்களையே பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்கின்றோம். இந்த முறை பிழையானதாகும். அரசாங்கம் தமது வசதிக்கேற்ப மாணவர்களை இணைத்துக் கொள்ளட்டும். ஆனால்  தகுதி வாய்ந்த ஏனைய மாணவர்களும் பட்டப்படிப்பினை மேற்கொள்ள தரமான தனியார் பல்கலைக்கழகங்களை அரசு உருவாக்க வேண்டும்.

    பல்கலைக் கழகங்கள் research, and inquiry, creative, moral leadership, and entrepreneur leadership  போன்ற கல்வி முறைகளுக்கு மாற்றம் பெற்று ஒருமைப்பாட்டோடு புதிய கண்டு பிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும். அதனூடாக நாடு முன்னேற வேண்டும்.

     இதற்கு ஆரம்ப கல்வி முறைகளில்  மாற்றம் என்பது இன்றியமையாததாகும். ஆரம்ப கல்விமுறையில் genius hour, experiential  hour, Bit-size learning, joyful learning and gamification  இவ்வாறான மாற்றங்களை கொண்டு வரப்படவேண்டும்.

    இதற்கு ஆரம்ப பாடசாலைகளுக்கு  double degree பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். நாம் இன்னமும் home guard teacher களை வைத்துக் கொண்டு உற்பத்தித்திறன் கொண்ட மாணவர்களை உருவாக்க முடியாது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 21 வயதுக்குள் பட்டம் பெறும் வகையில் கல்வித் திட்டம் மாற்றப்படவேண்டும் - கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸ் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top