(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலக்கம் 52, புஹாரி மஸ்ஜித் மாவத்தை வெலிகமையைச் சேர்ந்த மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரியின் ஸ்தாபகரும், மறைஞானப் பேழை மாத இதழின் நிறுவனருமான
அத்தரீக்கத்துல்
ஹக்கிய்யத்துல் காதிரியாவின் ஆத்மீகத் தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ்
ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹுஸைனியுல்
ஹாஷிமிய் நாயகம் அவர்கள் இன்று (03)புதன்கிழமை காலமானார்.
அன்னார்,
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரையில் 34 ஆவது
தலைமுறை திருப்பேரராகவும், ஸையிதுனா கௌஸுல் அஃளம் முஹிய்யுத்தீன் அப்துல்
காதிர் ஜீலானிய் (கத்தஸல்) அவர்களின் 21 ஆவது தலைமுறைத் திருப் பேரராகவும்,
இலங்கை மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா அல்
ஹஸனிய்யுல் ஹாஷிமிய் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, மர்ஹூமா ஸெய்யிதா ஷஹர்வான்
கண்ணே ஆகியோரின் அன்புப் புதல்வரும்,
மர்ஹூம்
அல் ஹாபிழ், ஏ.ஆர்.எம்.ஸகரிய்யா ஆலிம் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம்
அஸ்ஸெய்யித் ஸைனுல் ஆப்தீன் மௌலானா அல் ஹாஷிமிய், அஸ்ஸெய்யித் ஹாமித்
மௌலானா அல் ஹாஷிமிய் ஆகியோரின் சகோதரரும், ஸெய்யிதா ஹபீபா குறைஷ் கண்ணே,
ஸெய்யிதா ஸாபிஹா குறைஷி கண்ணே, ஸெய்யிதா நபீஹா குறைஷி கண்ணே, ஆகியோரின்
அன்புத் தந்தையும்,
அஸ்ஸெய்யித்
ஸாஜித் அலி மௌலானா, அஸ்ஸெய்யித் வாரிஸ் அலி மௌலானா, ஆகியோரின் சிறிய
தந்தையும் மாமனாரும் மற்றும் அஸ்ஸெய்யித் ஸாஹித் அலவி மௌலானாவின் மாமனாரும்
ஆவார்.
ஸெய்யிதா இஷ்பா
குறைஷ் கண்ணே, அஸ்ஸெய்யித் யாஸீன் அலி மௌலானா, ஸெய்யிதா மிஷ்பா குறைஷி
கண்ணே, ஸெய்யிதா நஸ்ரா குறைஷ் கண்ணே ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னவர்களின்
ஜனாஸா நல்லடக்கம் நாளை (04) வியாழக்கிழமை இந்தியாவுக்கு கொண்டு
செல்லப்பட்டு, திருச்சியில் உள்ள ஜாமிஆ யாஸீன் மத்ரஸாவில் நல்லடக்கம்
செய்யப்படும்.
சுன்னத்
வல் ஜமாஅத் மதுரஸாவைச் சேர்ந்த ஆலிம்களும், மாணவக் கண்மணிகளும் அவர்களுடைய
மதுரஸாக்களில் அவர்களுக்கான காயிப் ஜனாஸா தொழுவதோடு, அவர்களுக்காக
அருள்மறையையும் ஓதி ஹதியாச் செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.

0 comments:
Post a Comment