• Latest News

    February 07, 2024

    நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை மகிழ்விக்கும் நிகழ்வு…

     2024 ஆம் புதிய கால்வி ஆண்டின் முதலாம் தரத்திற்கு இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்று மகிழ்விக்கும் நிகழ்வு நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எம்.ரி. நெளபல் அலி தலைமையில் இன்று (06) இடம்பெற்றிருந்தது.

    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் அவர்களும் கெளரவ அதிதிகளாக அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் கெளரவ உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல். றியாஸ் ஆதம், அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் ஏ.எல். நிசாமுதீன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.-ஊடகப்பிரிவு-















     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் புதிதாக இணைந்து கொண்ட மாணவர்களை மகிழ்விக்கும் நிகழ்வு… Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top