• Latest News

    March 21, 2024

    தினசரி 03 பேர் மரணம். பொது மக்களுக்கு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை


     நாட்டில் வாய் புற்றுநோய் பாதிப்பினால் தினசரி 3 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

    வெற்றிலை , புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது. 

    அதே சமயம் வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதயநோய் மற்றும் நியுமோனியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்றையதினம் மார்ச் மாதம் 20ஆம் திகதி வாய் புற்றுநோய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக தினசரி 6 நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தினசரி 03 பேர் மரணம். பொது மக்களுக்கு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top