• Latest News

    May 27, 2026

    இன்று பாரிய சரிவை சந்தித்துள்ள இலங்கை ரூபா

    அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மேலும் சரிவடைந்து டொலரின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளது.  

    இதன்படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலரொன்றின்  விற்பனைப் பெறுமதியானது 330 ரூபாவை இன்றுத் தாண்டியுள்ளது.  

    இலங்கை மத்திய வங்கியினால் இன்று (27) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

    நேற்று (26) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று பாரிய சரிவை சந்தித்துள்ள இலங்கை ரூபா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top