• Latest News

    June 29, 2024

    நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் பதவி ஏற்பு


    நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலைக்கு அதிபராக ஏ.சி.ஹாமீது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று மாலை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வழங்கி வைத்தார்.

    இக்கடிதத்திற்கு அமைவாக இன்று காலை 09.30 மணியளவில் நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

    இப்பதவியேற்பு நிகழ்வில் கல்முனை வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.சாஜித், கல்முனை வலய முன்பள்ளி பாடசாலைகளின் உதவி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றஸீன், பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஆளணியினர், அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையின் பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆளணியினர் கலந்து கொண்டனர்.

    அதிபர் சேவை முதலாம் தரத்தையுடைய ஏ.சி.ஹாமிது (BSC) ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாவார்.

    1990.06.11ஆம் திகதி ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 14.07.1997 வரை நிந்தவூர் அறபா வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.

    15.07.1997 - 21.06.2009 வரை நிந்தவூர் அல் - மதீனா மகா வித்தியாலயத்திலும், 

    22.06.2009 - 08.06.2010 வரை பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இப்பாடசாலையில் கடமையாற்றிய நிலையில் 30.11.2009 இல் அதிபர் சேவையில் சித்தியடைந்து இப்பாடசாலையில் உதவி அதிபராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

    09.06.2010 - 03.07.2011 வரை நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் பிரதி அதிபராகவும்,

    04.07.2011 - 16.02.2021 வரை நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் பொறுப்பு அதிபராகவும்,

    17.02.2021 - 27.06.2024 வரை நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தின் அதிபராகவும் கடமையாற்றிய நிலையில் நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் காணப்பட்ட அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடைபெற்ற நேர்முக தேர்வில் அதிபராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் சிறந்த அதிபருக்கான குரு பிரதீபா பிரபா விருதினை பெற்றார்.

    2019 ஆம் ஆண்டு இமாம் றூமி வித்தியாலயத்தில் முதற் தடவையாக இல்ல விளையாட்டுப் போட்டியை நடத்தி வரலாற்று சாதனை படைத்தார்.

    2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இமாம் றூமி வித்தியாலயத்தில் 07 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைய வழி வகுத்தார்.

    மேலும் இப்பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்திக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து அபிவிருத்தி களை செய்தார்.

    இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் கடமையாற்றிய காலத்தில் 2022இல் உயர் தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் முதற் தடவையாக தோற்றிய மாணவர்கள் 100 வீத சித்தியைப் பெற்றனர்.

    இதே வருடத்தில் நடைபெற்ற 16/18 வயது ஆண்கள் பிரிவில் வலய மட்ட bolley ball சாம்பியன் பட்டத்தை இப்பாடசாலை பெற்றது.

    18 வயது ஆண் பிரிவில் நீளம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தை யும். 14 வயது பெண்கள் பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் மாகாண மட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயம் பெற்றுக் கொண்டது.

    2024 இல். 20 வயது மற்றும் 16 வயது ஆண்கள் பிரிவுகளில் வலய bolley ball சம்பியன் பட்டத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது 

    2022 (2023) இல் நடைபெற்ற உயர் தரப் பரீட்சையில் 03 மாணவர்கள் வர்த்தக துறையிலும், ஒரு மாணவர் கலைப் பிரிவுகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் நிலை இவரது காலத்தில் ஏற்பட்டது. 

    2023 (2024) இல் நடைபெற்ற உயர் தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் 04 மாணவர்களும், கலைப் பிரிவில் ஒருவரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

    2024 இல் Band Team உருவாக்கப்பட்டது. அதற்கான வாத்திய கருவிகள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

    இத்தகையதொரு பின்னணியில் இன்று நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலையில் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.








































    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர் தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் பதவி ஏற்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top