யேமனின் நிஷ்டுனுக்கு தென்கிழக்கே 96 கடல் மைல் (178 கிமீ) தொலைவில் உள்ள கடற் பரப்பில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் கப்பல் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும், எனினும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களை ஆதரித்து காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக நவம்பர் மாதம் முதல் செங்கடலில் இஸ்ரேலுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி குழு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் மற்றுமொரு கப்பல் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment