மீகொடை, அரலிய தோட்டப் பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட
பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” என்று அழைக்கப்படும் அமில கொஷான் குணரத்ன
உட்பட இருவரை பிணையில் விடுதலை செய்து பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும்
ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (21) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“ஷான் புதா” உட்பட இருவரும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், “ஷான் புதா” என்பவருக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மீகொடை, அரலிய தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், “ஷான் புதா” உட்பட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment