• Latest News

    March 27, 2025

    JVP ஏதோ தாம் மட்டுமே உத்தமர்கள் என்று ஏனைய அனைவரையும் ஒரே குட்டையில் போட்டு அரசியல் செய்ய பார்க்குது - மனோ கணேசன் M.P

     
    ஓடி ஒளிந்த IGP தேசபந்து தென்னாவின் முன்கதை

    இந்த பாராளுமன்ற பிரேரணைக்காக சபாநாயகரை சந்திக்க நாம் நேரம் கோரி ஏற்பாடு செய்து கொண்டிருந்த போதுதான் JVP குழு அவசர அவசரமாக சபாநாயகரை பார்த்து பிரேரணையை வழங்கியது.  

    இதன் பின்னணி என்ன தெரியுமா?  இந்த  தேசபந்துவை ரணில் அரசியலமைப்பு சபை மூலம் ஐஜி ஆக்கிய போது அரசியலமைப்பு சபையில் எதிர்த்தது, நாம்.  

    பாராளுமன்றில் அவருக்கு எதிராக அப்போதே தனிநபர் பிரேரணை கொண்டு வந்தது, நாம்.  

    பின் அவருக்கு எதிராக  நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நாம்.

    அப்போதெல்லாம் JVP அமைதியாக இருந்தது. ஏன் தெரியுமா?  

    கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ரணிலின் பணிப்புரையின் படி, டிரான் அலஸ், தேசபந்து மூலமாகதான் அபரிதமான பொலிஸ் பாதுகாப்பு JVP வேட்பாளருக்கு, அவரது கூட்டங்களுக்கு வழங்க பட்டது. இது ஊரறிந்த உண்மை. எமக்கு மறுக்க பட்ட கூட்ட மைதானங்கள் அவர்களுக்கு வழங்கப்படவும்  ரணில் பணிப்புரை வழங்கி இருந்தார்.  

    ஆகவே இனி ஒவ்வொன்றாய் கணக்கு எழுதி கூட்டி போட்டு பாருங்கள். விடை கிடைக்கும். விஷயம் விளங்கும்.

    நாம் அப்போதும் எதிர்கட்சிதான். நாம் ஒருபோதும்,  கோதா, மகிந்த, ரணில் அரசாங்க பங்காளிகள் அல்ல.   

    JVP ஏதோ தாம் மட்டுமே உத்தமர்கள்  என்று ஏனைய அனைவரையும்  ஒரே குட்டையில் போட்டு அரசியல் செய்ய பார்க்குது. அதில் விழுந்தவர்கள் விழித்து எழ வேண்டிய காலம் வருகிறது.

    மனோ கணேசன்  M.P

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: JVP ஏதோ தாம் மட்டுமே உத்தமர்கள் என்று ஏனைய அனைவரையும் ஒரே குட்டையில் போட்டு அரசியல் செய்ய பார்க்குது - மனோ கணேசன் M.P Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top