• Latest News

    March 23, 2025

    NPP நகர சபை வேட்பாளர் வீட்டில் கசிப்பு தொழிற்சாலை. பொலிஸார் முற்றுகை!

    தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று தம்புள்ளை டி4அல அத்துபரய பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    உரிமையாளர் இவ்வருடம் தம்புள்ளை மாநகர சபைக்கு போட்டியிடும் நபர் எனவும் அவர் சில காலமாக மிகவும் கவனமாக இத்தொழிலை நடத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.

    இந்த சோதனையில் 8 லட்சம் மில்லி லிட்டர் கோதா, 15000 மில்லி கசிப்பு ஸ்பிரிட், 20 பாட்டில்கள் கொண்ட கேன், 2 சுருள்கள், 4 பேரல்கள் உள்ளிட்ட உபகரணங்களை பொலிசார் கைப்பற்றினர்.

    வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர் இம்முறை தம்புள்ளை மாநகர சபையின் 24 பேர் கொண்ட திசைகாட்டியில்  குழுவில் களமிறங்கியுள்ளவர் என கூறப்பட்டது.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: NPP நகர சபை வேட்பாளர் வீட்டில் கசிப்பு தொழிற்சாலை. பொலிஸார் முற்றுகை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top