• Latest News

    March 25, 2025

    காசாவில் இஸ்ரேலpன் தாக்குதல்களில் மேலும் பலர் பலி

     காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், நேற்றைய தினத்தில் மாத்திரம் பெண்கள் மற்றும் சிறுவர்கள்; உட்பட 65ற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் உடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முறித்ததிலிருந்து ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் வான் மற்றும் தரைவழி நடவடிக்கைகளின் ஊடாக இஸ்ரேலிய படையினர், காசாவில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளன.இதன்படி கடந்த 17 மாத கால போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.இதற்கிடையில், போர் நிறுத்தத்தை மீண்டும் செயலுக்கு கொண்டு வர எகிப்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதன்படி, இஸ்ரேல் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் நிலையில், அமெரிக்க-இஸ்ரேலியர் உட்பட ஐந்து உயிருள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்று எகிப்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அதேநேரம் இஸ்ரேலும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இது தொடர்பான உடன்பாட்;டு செய்திகள் இன்னும் வெளியாகவில்லை இதற்கிடையில், காசா போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதே முன்னோக்கி செல்லும் ஒரே வழி என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காசாவில் இஸ்ரேலpன் தாக்குதல்களில் மேலும் பலர் பலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top