முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே தனது 82ம் வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்கள் பலவற்றில் காமினி லொகுகே முக்கிய பதவிகள் பலவற்றை வகித்துள்ளார்.1943ஆம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி பிலியந்தலையில் பிறந்த காமினி லொகுகே பிலியந்தலை மத்திய கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
1960ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக காமினி லொகுகே தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார்.
1983ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியை ஈட்டி காமினி லொகுகே முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.
சுற்றுலாத்துறை, விளையாட்டுத்துறை, நகர அபிவிருத்தி, போக்குவரத்து உள்ளிட்ட சில அமைச்சுப் பதவிகளையும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் காமினி லொகுகே வகித்துள்ளார்.
0 comments:
Post a Comment