சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
எப்பாவளை பாஸ்பேட்டை உலக சந்தை விலையை விட மிகக் குறைவான விலைக்கு மூன்று தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் அரசாங்கத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் பத்தாயிரம் மெட்ரிக் டன் எப்பாவளை பாஸ்பேட்டை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தீர்மானித்தது.
இது தொடர்பில் கடந்த 2023 ஜூலை மாதம் 6ஆம் திகதி, லங்கா பொஸ்பேட் லிமிடெட் நிறுவனம் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் அறிவித்திருந்தது.
சட்டபூர்வ அதிகாரமின்றி, இதற்கான ஏற்றுமதி உரிமம் வழங்கவும் குறித்த நிறுவனம் பரிந்துரைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொடுக்கல் வாங்கல் சட்ட விரோதமானது எனவும் இதனால் நட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட சில தரப்பினர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த பொஸ்பேட் ஓா் முக்கியமான கனிய வளம் என்பதுடன் பல்வேறு உற்பத்திகளுக்கு இந்த கனிய வளம் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment