• Latest News

    December 16, 2025

    இன்று திறக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் 22 ஆம் திகதி மூடப்பட்டு 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.


    அனைத்து பாடசாலைகளும் இன்று (16) திறக்கப்பட்டாலும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மீண்டும் மூடப்பட்டு 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
     
    இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
     
    அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
     
    பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கான உரிய ஆடைகளை அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
     
    அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் வழக்கமான தமது பாடசாலைக்குச் செல்வது அவசியமில்லை எனவும் தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று திறக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் 22 ஆம் திகதி மூடப்பட்டு 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top