• Latest News

    December 10, 2025

    கண்டியை வேறு ஒரு இடத்திற்கு தான் கொண்டு போக வேண்டும்! - லால்காந்தா தெரிவிப்பு


    தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கையின் படி கண்டியை வேறு ஒரு இடத்திற்கு தான் கொண்டு போக வேண்டியுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்தா தெரிவித்துள்ளார்.

    கண்டியில் இன்று (10.12.2025) நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

    தொடர்ந்துரையாற்றிய அவர், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி தொடர்பில் வெளியிட்ட அறிக்கையின் படி பார்த்தால், கண்டியை அம்பாறை அல்லது அநுராதபுரத்திற்கு தான் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

    மக்களின் வாழ்க்கையை மீளமைக்க படிப்படியாக நாம் எடுக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 

    நாம் பாடசாலைகளை ஆரம்பிக்க முயற்சிக்கையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின் படி மீண்டும் பாடசாலைகளுக்கு மக்களை கொண்டு வரும் செயற்பாடுகளையே செய்ய வேண்டியுள்ளது. நாம் பல மட்டங்களில் இன்று பேச்சுவாரத்தை நடத்தினோம்.

    ஆனால் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தான் தீர்மானமாக உள்ளது. கண்டியிலுள்ள 20 பிரதேசங்களையும் வேறு எங்கேயும் கொண்டு செல்ல முடியாது.அதனால் அதிகமாக பாதிப்புள்ள பகுதிகளை மட்டும் எமக்கு தருமாறு கேட்டுள்ளோம்.

    தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் போதுமானதாக இல்லை.அதனால் நாம் வெளிநாட்டு உதவிளையும் கோரவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்டியை வேறு ஒரு இடத்திற்கு தான் கொண்டு போக வேண்டும்! - லால்காந்தா தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top