அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் முதலையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயது மதிக்கத்தக்க அப்துல் குத்தூஸ் ரமீஸ் என்பவரே முதலையின் தாக்குதலுக்குள்ளாகி மரணித்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒலுவில் ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.01.2025 ) பிற்பகல் 02.30 மணியளவில் மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆற்றில் இறங்கிய மேற்படி நபரை முதலை தாக்கி ஆற்றினுள் இழுத்துச் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொது மக்கள் ஆற்றில் தேடிய போதிலும் உடலை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந் நிலையில் இன்று காலை 10.20 குறித்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபரை மீட்கும் பணிகள் இரண்டு நாட்களாக ஒலுவில் வாழ் பொதுமக்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர்,சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை பிரிவினர் மற்றும் அல் - உஸ்வா சம்மாந்துறை ஜனாசா அமைப்புக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











0 comments:
Post a Comment