• Latest News

    May 27, 2026

    பிரதமரைப் பற்றி போலிச் செய்திகள்! பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு


    பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

    சமூக ஊடகங்களில் போலி காணொளிகள் மற்றும் பிரதமரின் புகைப்படத்தை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட போலிப் பதிவுகளை சமூக ஊடகங்களில் சில தரப்பினர் வெளியிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பல்வேறு தொழில்முனைவோர் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பான போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இவ்வாறான போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    இத்தகைய செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொது மக்களிடம் பிரதமரின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    அரசாங்கத்திற்கும் பிரதமரின் தனிப்பட்ட நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான போலிச் செய்திகளை உருவாக்குவதும், அவற்றைச் சமூக ஊடகங்களில் பகிர்வதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதமரைப் பற்றி போலிச் செய்திகள்! பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top