லிபிய பெங்காஸி நகரிலுள்ள சிறைச்சாலையிலிருந்து சுமார் 1200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். அல் கவபியா சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரமொன்றை அடுத்தே கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அந்நகரின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளரான அப்டெவ்சலாம் அல்-
மிஸ்மாரியின் படுகொலையையடுத்தே மேற்படி சிறையுடைப்பு இடம் பெற்றுள்ளது. அல் மிஸ்மாரியின் மரணச்சடங்கில் நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அல் மிஸ்மாரியின் படுகொலைக்கும் சிறையுடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது அறியப்படவில்லை. சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்கள் கடும் தண்டனை விதிப்புக்களை
எதிர்கொள்வர் என பென்காஸி நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர்
தெரிவித்தார்.
லிபிய பிரதமர் அலி ஸெயிடன் விபரிக்கையில், அந்நகரின் தென் பகுதியிலுள்ள பிரதேசவாசிகள் தமது பிரதேசத்தின் மோசமான நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்படி சிறைச்சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். அதேசமயம் சிறைச்சாலைக்குள்ளும் கலவரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தப்பிச்சென்ற கைதிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு விசேட படையொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment