• Latest News

    July 23, 2013

    வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி !


    ஒரு கிராமவாசி நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் 'கேளுங்கள்' என்றார்கள்.
    1)   நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
          நீங்கள் போது        மென்ற               தன்மையை பெற்றுக்                                               கொள்ளுங்கள்.  பணக்கார்ராகிவிடுவீர்கள்.
    2) மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
        தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
    3 )நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
        ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
    4 ) நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.? ஜனங்களுக்கு உங்களை    கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல        மனிதராக ஆகி விடுவீர்கள்.

    5 )  நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
         நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
    6 ) நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
        அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
    7 )அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
        அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்
    8 )ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
        எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்
    9) துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
       ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக்      கொள்ளுங்கள்.
    10 )முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
          நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
    11 )கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில்    சந்திக்க விரும்புகிறேன் ?  குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்
    12) பாவங்கள் குறைய வழி என்ன ?
          அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்
    13) கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
          அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்
    14 )அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
           பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்
    15)  உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
           விபச்சாரம் செய்வதை விட்டும் இழிவடையாமல்        பாதுகாக்கப்படுவீர்                                                    
    16) அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
           அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்
    17) அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
           பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்
    18) நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
          அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் அல்லது                                     அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி      வணங்குங்கள்
    19 ) பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
           கண்ணீர், பலஹீனம், நோய்
    20 ) நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
           இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது
    21) அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
           மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது
    22) எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
         கெட்ட குணம் – கஞ்சத்தனம்
    23) எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
          நற்குணம் – பொறுமை – பணிவு
    24) அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
          மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்



    ( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி ! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top