• Latest News

    August 17, 2013

    எகிப்தில் இன்றும் இராணுவப் பயங்கரவாதம் 50 பேர் ஸஹீத்

    எகிப்தில் இன்று வெள்ளிக்கிழமை இராணுவம் நடாத்திய  பயங்கரவாத தாக்குதலில்  50 வரையான முர்ஸி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளர். 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிடுகிறது. Video இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னார் ஹேய்றோவின் 28 மஸ்ஜித்துக்களில் இருந்து முர்ஸி ஆதரவாளர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் ,இவர்கள் மீது ஹெலிகொப்தர் மூலம் படுகொலை  தாக்குதல்கள் நடாதாப்பட்டு வருகிறது.
    எகிப்தில்  இராணுவ சதிப் புரட்சி மூலம்  பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி  முர்ஷியிக்கு  ஆதரவாக  நடாத்தப்படும் தொடரான  ஆர்பாட்டத்தின்  மீது நேற்று முந்தினமும் இராணுவம்  நடத்திய தாக்குதல்களில்  2600 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக  இஹ்வான்களின்     தாவல்கள்  குறிப்பிடுகிறது
    இதேவேளை 600 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் 3700 பேர் காயமடைந்துள்ளதாகவும் எகிப்து இராணுவ நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது.     அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் ஆனால் எண்ணிக்கையை   சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
    படுகொலைகள் எம்மை முடக்கிவிடாது அவை எம்மை இலக்கு நோக்கி ஊக்கப் படுத்தும் வெற்றி கானும்வரை ஓயமமாட்டோம் அமைதியான போராட்டம் தொடரும் என்று இஹ்வான்  தெரிவித்துள்ளது
    அதேவேளை கிஸ்தவ தேவாலையங்கள் மீதும், பொது கட்டங்கள் மீதும் இராணுவ நிர்வாகம் தாக்குதல்களை நடாத்திவிட்டு பழியை தம்மீது  போடுவதாக இஹ்வான்கள அறிவித்துள்ளர்.

    hh1

    hh
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எகிப்தில் இன்றும் இராணுவப் பயங்கரவாதம் 50 பேர் ஸஹீத் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top