• Latest News

    August 26, 2013

    நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்து ஆளும் கட்சிக்குள் அடிபாடு

    நவனீதம்பிள்ளையின் இலங்கைப் பயணம் – ஆளும் கட்சிக்குள் கருத்து முரண்பாடு
    ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
    பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை ஆரோக்கியமானதாக நோக்குகின்றது. எனினும், கடும்போக்குடைய கொள்கைகளை பின்பற்றி வரும் ஜே.என்.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் இதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
    இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு காத்திரமான பதிலளிக்க முடியும் என ஆளும் கட்சியன் ஒரு தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, இலங்கைக்கு எதிரான மேற்குலக நாடுகளின் சதி முயற்சியின் ஓர் கட்டமாக நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தை சில கூட்டணிக் கட்சிகள் அடையாளப்படுத்தியுள்ளன.
    நவனீதம்பிள்ளை புலி ஆதரவாளர்களுக்கு சார்பாக செயற்படக் கூடுமென அந்தத் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
    குணதாச அமரசேகர தெரிவித்திருக்கும் கருத்து நாட்டுக்கு சேதம் விளைவிக்கும்
    ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கை வர இடமளித்தமை அரசாங்கம் செய்த முட்டாள்தனமான காரியம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்திருக்கும் கருத்து நாட்டுக்கு சேதம் விளைவிக்கும் கருத்து என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
    குணதாச அமரசேகர போன்ற நபர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கெடுதியானது. இலங்கையிடம் இருக்கும் திறந்த மனபான்மையை காட்டுவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
    மனித உரிமை ஆணையாளர் சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியமான நபர் என்பதால், மிகவும் முக்கியமான சந்தர்ப்பங்களில் கருத்துக்களை வெளியிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வாசுதேவ கூறியுள்ளார்.
    இதனிடையே அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாளைய (26) தினம் அவரது அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
    நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணத்தை அனுமதித்தமை முட்டாள்தனமாக நடவடிக்கை
    ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைப்; பயணத்தை தாம் எதிர்ப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
    இது அரசங்கம் செய்து கொண்டுள்ள முட்டாள்தனமாக நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
    இதனால் நவநீதம்பிள்ளையின் வருகையை எமது அமைப்பு முற்றாக நிராகரிக்கின்றது. பிள்ளை யார் அவரது வரலாறு என்ன என்பது எமக்கு தெரியும்.
    அவர் இலங்கையை ஸ்தீரதன்மையை குழப்பினார். அரசசார்பற்ற நிறுவனங்கள் சார்பில் குரல் கொடுத்தாலும் அவர் மேற்குலக நாடுகளில் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படும் நபர். அவரை இங்கு வரவழைத்தது அரசாங்கம் செய்த முட்டாள்தனம்.
    இவர் இலங்கை வந்த திரும்பி சென்ற பின்னர், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னர் செய்ததையே செய்வார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அரசாங்கம் செய்யும் பெரும் முட்டாள்தனமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்து ஆளும் கட்சிக்குள் அடிபாடு Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top