கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் விசேட திறமை கொண்ட அதிபர் மற்றும் ஆசியரிகளை தெரிவு செய்து கௌரவிப்பதற்காக கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் அதிபர், ஆசிரியர்களின் பெயர்களை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் வலயக் கல்வி அலுவலங்களிடம் கோரிய போதிலும், அனுப்பி வைக்கப்பட்ட பெரும்பாலான தெரிவுகள் விளையாட்டுத்துறை சார்ந்ததாக மட்டுமே இருப்பதாகவும், ஏனைய துறைகளில் திறமை காட்டிய அதிபர், ஆசியரியர்கள் கிழக்கு மாகாணத்தில் இல்லையா என்றே சந்தேகங்கள் எழுவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் கிழக்கு மாகாணத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கல்வித்துறையினுள் புருண அறிவுத் திறன்களுடன் அத்துறைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை பெற்றுத் தந்து சிறந்த ஆளுமையுடன் கூடிய மாணவப் பரம்பரையினை உருவாக்குவதற்கு பெருமதிமிக்க சேவையில் ஈடுபடுவதோடு, பொதுவான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் புறம்பாக கல்வித்துறையினை மேலும் விரிவுபடுத்தி புதிய பாதைகளைத் தேடி ஆக்கபூர்வமான, ஆய்வுபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு சர்வதேச அல்லது தேசிய மட்டத்தில் விசேட திறமைகளைக் காட்டி கல்வித்துறைக்கு கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்த ஆசிரியர். அதிபர்களிடையே தெரிவு செய்யப்பட்டோரை தேசிய மட்டத்தில் மதிப்பீடு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், மாகாண கல்விப் பணிப்பாளர் மூலம் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உரிய கல்வி அதிகாரிகளின் கருத்துக்கள் அறியப்பட்டு, இதன் பின் ஒரு மாகாணத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட விசேட திறன் கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் 06 பேரைத் தெரிவு செய்து கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளருக்கு (கல்வி பண்புசார் அபிவிருத்தி) அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதனடிப்டையில் இவ்வகையான ஆசிரியர்களை தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறு ஒரு மாத காலத்திற்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்களைக் கோரிய போது அனுப்பி வைக்கப்பட்ட தெரிவுகளில் பெரும்பாலானோர் விளையாட்டுத்துறை சார்ந்தோராக மட்டுமே உள்ளனர். வேறு திறன் கொண்ட பல அதிபர்கள், ஆசிரியர்கள் இருந்தும் அவர்கள் தங்களை வெளிக்காட்ட விரும்பாமல் இருக்கின்றார்களா? அல்லர் அவ்வாறான அதிபர்கள், ஆசிரியர்கள் இல்லையா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு விண்ணப்பங்கள் மிகமிகக் குறைவாக கிடைக்கப் பெற்றுள்ளன.
கிழக்கு மாகாணத்திற்கு தரப்பட்ட ஒதுக்கீடு 06 பேர் எனினும், இவ்வொதுக்கீட்டினை அதிகரிக்குமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கெண்ட கல்வி அமைச்சு அதனை 08 ஆக அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு தலா ஒன்று என்ற அடிப்படையில் தமிழ் அதிபர், ஆசிரியர்கள் 03 பேரும், முஸ்லிம் அதிபர் ஆசிரியர்கள் 03 பேரும் என மொத்தமாக 06 பேரும், அம்பாரை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என்ற அடிப்டையில் சிங்கள அதிபர், ஆசிரியர் 02 பேரும் என மாகாணத்தில் மொத்தமாக 08 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
போதிய விண்ணப்பங்கள் கிடைக்காமையினால் இத்தெரிவினை பூர்த்தி செய்வதில் சிரமங்கள் எதிர் நோக்கப்படுகின்றன.
எனவே, தகமையுடைய அதிபர், ஆசிரியர்கள் தமது விண்ணப்பங்களை வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபார்சுடன் மாகாண கல்வித் திணைக்கள பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி: ஜே.அருளானந்தம் அவர்களிடம் நேரடியாக 2013.08.21ம் திகதிக்கு முன் ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றார்கள்.
விண்ணப்பங்கள் சுயமாக தயாரிக்கப்படுவதுடன் தகைமைக்குரிய ஆவணங்களின் பிரதிகள் அல்லது தகைமை உறுதிப்படுத்தும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கடிதம் இணைக்கப்படல் வேண்டும்.

0 comments:
Post a Comment