இந்த காலப்பகுதியில், மின் உற்பத்தி நிலையத்தின் வருடாந்த பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சார்ந்த நீர்த் தேக்கங்கள் அனைத்தும்
முற்றாக நிரம்பியுள்ள நிலையில், முழு அளவில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள்
செயற்படக் கூடிய தன்மை காணப்படுவதாக இலங்கை மின்சார சபை
சுட்டிக்காட்டியுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதன் காரணமாக, தொடர்ச்சியாக
மின்சார விநியோகத்திற்கு தடை ஏற்பட மாட்டாது என்றும் இலங்கை மின்சார சபை
மேலும் தெரிவித்துள்ளது. nf
0 comments:
Post a Comment