• Latest News

    August 02, 2013

    பள்ளிவாசல்கள் இபாதத்துக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட வேண்டும் - அல்-ஹாபிழ், மௌலவி ஏ.ஏ.அலிஅஹமட் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

    அஹமட் -
    சம்மாந்துறை ஜலாலியா ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் சுமார் 02 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இப்தார் நிகழவினை அடுத்து மஃரிப் தொழுகைக்குப் பின்னர் இராப்போசனமும் வழங்கப்பட்டது.
    இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர், இலங்கை சவூதி தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ.எம்.மாஹீர், சம்மாந்துறை பள்ளிவாசல்களின் சம்;மேளனத் தலைவர் அப்துல் ஜப்பார் உட்பட உலமாக்கள் பலரும் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
    அல்-ஹாபிழ், மௌலவி ஏ.ஏ.அலிஅஹமட் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவாற்றினார். அவர் உரையாற்றுகின்ற போது ' இன்று பள்ளிவாசல்கள் பெரிதாக கட்டப்பட்டு நவீன பொருட்களைக் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பள்ளிவாசல்களில் தொழுவதற்கு ஆட்களில்லை. பள்ளிவாசல்கள் இபாதத்துக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் வணக்கங்களின் மூலமாக அலங்கரிக்கப்பட்டன.
    இன்று நம்மிடையே இபாதத்திற்குள் வெகுவாக குறைவடைந்து விட்டன. இதனால், எம்மைப் பற்றிய அச்சத்தை அல்லாஹ் அந்நியர்களிடம் இருந்து அகற்றி விட்டான். இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் அந்நியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    இன்று இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் உரத்த குரலில் பேசலாம். இந்தப் பேச்சிக்களினால் எங்களுக்கு பாதுகாப்புக்கள் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எமது இபாதத்திற்களைஅதிகரித்து அல்லாஹ்விடம் துஆக் கேட்க வேண்டும். நம்மில் அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்கள் சொன்ன வாழ்வு முறையும் வருமாக இருந்;தால் எல்லாம் சீரடைந்து விடும்.
    அல்லாஹ் ரமழான் மாதத்தை ஏற்படுத்தி தந்தமைக்கான பிரதான காரணம், அதிகமாக இபாதத்திற்களில் ஈடுபட்டு நம்மில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவாகும்.  தற்போது கடைசிப் பத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். பள்ளிவாசல்களில் இஹ்திகாப் இருந்து அதிக அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடல் வேண்டும். அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்களாக எமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.' என்றார்.









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பள்ளிவாசல்கள் இபாதத்துக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட வேண்டும் - அல்-ஹாபிழ், மௌலவி ஏ.ஏ.அலிஅஹமட் (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top