• Latest News

    August 26, 2013

    நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ஹக்கீமை இன்று சந்திக்கிறார்

    இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.அத்துடன், வடக்கிற்கு நாளை விஜயம் செய்யவிருக்கின்றார்.
    இன்று திங்கட்கிழமை
    இன்றைய தினம் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ், சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ மற்றும் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோனை  நவனீதம்பிள்ளை சந்திக்க உள்ளார்.
    அதேவேளை சிவில் அமைப்புப் பிரதிநிதிகளையும் இன்றைய தினம் நவனீதம்பிள்ளை சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
    வடக்கில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே விஜயம் செய்யவிருக்கின்றார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ஹக்கீமை இன்று சந்திக்கிறார் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top