• Latest News

    August 29, 2013

    மேயரை மிரள வைத்த பெண் நிருபர்! திடீரென மேலாடையை கழற்றினார்

    கனடாவில் மேயர் ஒருவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் நிருபர், தன்னுடைய மேலாடையை திடீரென கழட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கெலோவ்னா நகர மேயர் வால்டர் கிரேவுக்குத்தான் இந்த தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
    நேற்று முன்தினம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் Go Topless Day என்ற தினம் கடைபிடிக்கப்பட்டது.
    இந்நிலையில் மேயர் வால்டரை பெண் நிருபர் லோரி வெல்போர்ன் பேட்டி எடுக்க சென்றுள்ளார்.

    அப்போது, நான் தெருவில் டாப்லெஸ்ஸாக நடந்து போனால் எப்படி இருக்கும் என்று வால்ட்டரிடம் சிரித்தபடி கேட்டார் லோரி.
    அதற்கு வால்ட்டர் பதிலளிக்க முற்பட்டபோது, திடீரென தனது மைக்கை வால்ட்டரிடம் கொடுத்து விட்டு தான் அணிந்திருந்த டாப்ஸை அப்படியே கழற்றிக் கீழே வைத்தார்.
    அரைநிர்வாணமாக காணப்பட்ட லோரியை பார்த்து என்ன செய்வதென்றே தெரியாமல் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார் மேயர்.
    பின்னர் சுதாரித்துக் கொண்டு, லோரியிடம் என்ன செய்றீங்க என்று கேட்டார். அதற்கு லோரி, 'it's really hot in here' என்று பதிலளித்தார்.
    பின்னர் வால்ட்டர் பேசுகையில், இப்படி திறந்த மார்புடன் தெருவில் நடப்பது இங்குள்ள சட்டப்படி குற்றமில்லை என்பதால் இதைப் பெரிய விஷயமாக நான் கருதவில்லை என்று கூறினார்.
    அதற்கு லோரி, அப்படியென்றால் நான் கெலோவ்னா நகர வீதிகளில் இப்படி திறந்த மார்புடன் நடக்க முடியுமா என்று கேட்க, அதற்கு மேயரோ, நிச்சயமா போகலாமே... நீங்கள் இப்படிச் செய்வது நிச்சயம் சட்டவிரோதம் இல்லை என்று மட்டும் என்னால் கூற முடியும் என்று பதிலளித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மேயரை மிரள வைத்த பெண் நிருபர்! திடீரென மேலாடையை கழற்றினார் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top