• Latest News

    August 29, 2013

    பழி தீர்க்கவே நவனீதன் பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் - தேசிய சுதந்திர முன்னணி

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதன் பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தது, மனித உரிமைகள் மீறப்படுகிறதா என்பதை ஆராய்வதற்காக அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாதத்தை தோற்கடித்தமைக்கு பழி தீர்க்கவே அவர் வந்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
    தேசிய சுதந்திர முன்னணியின் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் முஸாம்பில், ஐக்கிய நாடுகளின் மனித உhpமைகள் பேரவையானது பலம்பொருந்திய செல்வந்த நாடுகளின் முதலீடுகளுடன் சார்ந்துள்ள ஒரு அமைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

    அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
    "நவனீதன் பிள்ளை வடக்கிற்கு விஜயம் செய்தது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு அல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒரு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவே அங்கு விஜயம் செய்துள்ளார்.
    ஐக்கிய நாடுகள் சபை அமைப்பானது உலகின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமான ஒரு அமைப்பாகும். எனினும் இன்று அவர்கள் சுயாதீனமாகவே செயற்படுகின்றனர். லிபியா, ஈராக் போன்ற நாடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும், அரச தலைவர் ஒருவரை துடிக்கத் துடிக்க கொன்ற போது கூட அதை ஒரு கனம் கண்திறந்து கூட பார்க்கவில்லை. ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள் அவற்றை பார்க்கவில்லை. அவர்களது மனித உhpமை பேரவை ஒன்றும் செய்யவில்லை.
    இன்று மனித உரிமைகள் பேரவை செல்வந்த நாடுகளின் நிதியில் சார்ந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனிக்க அல்ல நவனீதன் பிள்ளை இலங்கைக்கு வந்தார், அதற்குப் பதிலாக இலங்கை மீது மனித உரிமை குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவே இலங்கை வந்துள்ளார். செப்டெம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ள அறிக்கையில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறித்து கூறுவதற்கே அவர் முயற்சிக்கிறார். வேலுப்பிள்ளையின் மனித குண்டுகளுக்கு பயப்படாமல் எதிர்க்கொள்ளக்கூடிய மக்கள் அன்று இலங்கையில் இருந்தார்கள். அதனால் நவனீதன் பிள்ளை போன்ற மனித உரிமை குண்டுகளை எதிர்க்கொள்ள முடியாமல் போகாது." என முஸாம்பில் தொpவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பழி தீர்க்கவே நவனீதன் பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் - தேசிய சுதந்திர முன்னணி Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top