இலங்கையில் காவல்துறையினர் சித்திரவதையை விசாரணைகளின்
போது ஒரு வழிமுறைகாகப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச
மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.
இலங்கையில் 1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம்
ஆண்டுவரை காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்ட சுமார் 1500 பேர்
தொடர்பான சம்பவங்களை ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தொகுத்துள்ளது.
நாட்டில் காவல்துறை சீரமைப்பு குறித்து
பொதுமக்களிடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று அந்த
ஆணையத்தைச் சேர்ந்த பசில் ஃபெர்ணாண்டோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதற்காக இலங்கை அரசுக்கு உதவ சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் தமது ஆணையம் கோரும் எனவும் அவர் கூறுகிறார்.
நிர்வாணமாக்கித் தாக்குதல்
பலர் தங்களது மர்ம உறுப்புகள் கூட தாக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட தாக்குதலின்
பாதிப்பு இன்றளவும் உள்ளது என்று சாட்சியம் அளித்தவர்கள் தெரிவித்துள்ளதாக
அந்த ஆணையம் ஆவணப்படுத்தி வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினர், பலரை நிர்வாணமாக்கி கொடுரூரமாக
தாக்கியதாகவும், அதன் தாக்கம் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தொடருகிறது
எனவும் சாட்சியம் அளித்த பலர் தெரிவித்துள்ளதாகவும் அந்தப் புத்தகத்தில்
கூறப்பட்டுள்ளது.
இப்படியாக சித்திரவதைகளை எதிர்கொண்டவர்களின் கதையை
அவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாலேயே இதை தாங்கள் முன்னெடுத்ததாகவும்
பசில் ஃபெர்ணாண்டோ மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment