குருணாகல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் ஷமால் செனரத்னவின் தலைமையில் குருணாகலை பிரதான அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
'லங்கா ஈ நியூஸ்' இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையொன்றை மேற்காட்டியே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் மந்தனாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தொpயாத குழுவினர் இராணுவ பிரிவின் சிங்க படையணியைச் சேர்ந்த அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று என 'லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்திருந்தது.
இந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதமாக, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் கதிரப்புலிகே இந்திக்க சம்பத் குமார என்ற சிங்க படையணியில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஆவார்.
என்றபோதிலும் 'ஸ்ரீலங்கா மிரர்" பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் இதுதொடர்பாக கேட்டபோது அவர் கூறுகையில், ஊடகவியலாளர்களின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத குழுவினர் உண்மையில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியாது எனவும் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையென தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் இலங்கை ஊடவியலாளர் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டிற்குள் சிலர் நுழைந்தது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதற்கு அல்ல, காசு மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிடுவதற்கே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன இன்று (24) பொலிஸ் தலைமையகத்தில் பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கெள்ளையர்கள் வீட்டின் ஜன்னலால் உள்ளே நுழைந்து அவர்கள் வெளியேறுவதற்காக பின்வாசல் கதவை திறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாலையில் வீட்டிற்கு வந்த மந்தனா இஸ்மாயிலின் கணவர் வீட்டிற்குள் சிலர் இருப்பதாக அறிந்து அவசர பொலிஸ் பிரிவிற்கு அழைப்பினை ஏற்படுத்தியதாகவும், அதன்படி பொலிஸ் குழுவினர் செயற்பட்டதன் விளைவாக வீட்டிற்குள் நுழைந்தவர்களை மடக்கிப் பிடித்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.
'ஸ்ரீலங்கா மிரர்"
0 comments:
Post a Comment