குடிப்பதற்கு குடிநீர் கேட்ட, வெலிவேரிய அப்பாவி பொதுமக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக
முன்வைக்கப்படும் கண்டனங்களை வேறு திசைக்குத் திருப்புவதற்காக ராஜபக்ஷக்கள் ஜாதிப் பிரச்சினையை கிளப்பிவிட நடவடிக்கை மேற்கொள்ளும் விதம் கிராண்பாஸ் சம்பவத்தை படம்பிடித்துக் காட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவு பிரதானி மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கிராண்பாஸ் சம்பவமானது அரசாங்கத்தின் சதிவேலையென மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
கிராண்பாஸ் சம்பவம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக 'ஸ்ரீலங்கா மிரர்' அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவற்குளி கிராமத்தில் அமைக்கப்பட்ட 'சிங்கள ராவய' விகாரை மீது குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களானது வட மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் நோக்காகக் கொண்டு அரசாங்கம் கையாளும் மற்றுமோரு உத்தியென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய மக்களை அழித்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக மக்களால் முன்வைக்கப்படும் எதிர்ப்பு குற்றச்சாட்டுக்களை திசைத் திருப்புவதற்காக விஷ இரசாயனப் பொருட்கள் அடங்கிய பால்மாவை தடை செய்தல் தொடர்பான செயற்பாட்டை முன்னெடுத்திருந்ததாகவும் ஐக்கிய தேசியக் கடசியின் தொடர்பாடல் பிரதானி மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment