• Latest News

    August 20, 2013

    பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்தியப் பிரதமருக்கு ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு

    http://ilakkiyainfo.com/new/wp-content/uploads/2013/08/Manmohan-GL.png


    இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தி யாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்
    கொழும்பில் நடக்க உள்ள பொதுநலவாய அரச தலைவர்கள்  மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு வpடுத்தார்.
    எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச  தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பதற்காகவே வெளிவிவகார அமைச்சர் இந்த இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
    அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கவுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
    இந்த சந்திப்பின் போது இலங்கை இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்தியப் பிரதமருக்கு ஜீ.எல்.பீரிஸ் அழைப்பு Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top