• Latest News

    August 28, 2013

    ஞானசார தேரர் இராவணா சக்தி மீதும் பாய்ச்சல்..!

    ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதன் பிள்ளைக்கு எதிராக "இராவணா சக்தி" அமைப்பினால் நேற்று இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலபொடஅத்தே ஞானசார தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    "தற்போது நவனீதன் பிள்ளை இலங்கைக்கு வந்துவிட்டார். அதுகுறித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இருக்கும் போது, நேற்று 30, 40 பேர் கொண்ட சிறிய குழு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சென்று, ஒரு அமைச்சரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தால், அது நவனீதன் பிள்ளைக்கு எதிராக 30, 40 பேர் கொண்ட சிறிய குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சர்வதேசத்திற்கு செய்தியாக போய் சென்றுவிடும். அது நவனீதன் பிள்ளையின் நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கும் சக்திகளை பலவீனப்படுத்துவதாக அமைகிறது. பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவிருந்த சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது......" என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

    தமது அமைப்பு ஆரம்பித்துள்ள பௌத்த புனருத்தாரன நடவடிக்கைகளை வேறு திசையில் திருப்புவதற்கு அரசில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்கள் முயற்சி செய்வதாகவும் வணக்கத்திற்குரிய கலபொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் அமைச்சர் விமல் வீரவங்சவை நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவரை விமர்சனமும் செய்துள்ளார். விமல் வீரவங்ச அமைச்சரினால் "இராவணா சக்தி" நடவடிக்கைகளை மேற்கொண்டமையே இந்த விமர்சனத்திற்கு முக்கிய காரணமாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஞானசார தேரர் இராவணா சக்தி மீதும் பாய்ச்சல்..! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top