நவனீதம் பிள்ளை இலங்கைக்கு வந்தது நாட்டின் நிலைமையை ஆராய்ந்து அறிக்கை
தயாரிப்பதற்காக அல்லவெனவும், அவர் தற்போதே அறிக்கையை தயாரித்து
முடித்துள்ளதாகவும் ஊடக அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ
நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்
நவனீதன் பிள்ளையின் விஜயம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து
வருகின்ற நிலையில், பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க
கூறுகையில், மனித உரிமைகள் ஆணையாளர் போன்ற பாத்திரங்கள் பக்கசார்பற்ற
விதத்தில் நடந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவங்ச கூறுகையில், அன்று மஹிந்த ராஜபக்ஷ
வெற்றிபெறவில்லையென்றால் நவனீதன் பிள்ளையின் விஜயத்திற்கான நோக்கம்
முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமெனத் தொpவித்தார்.
சிலர் வீட்டிற்கு திருடர்கள் புகுந்தாலும் நவனீதன் பிள்ளையிடம்
முறைப்பாடு செய்ய தயாராகி இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஷ அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது
தெரிவித்துள்ளார்.
என்றபோதிலும் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக திருப்தியற்றதொரு அறிக்கையை வெளியிடுவாராயின் அடுத்த மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு பாரிய பாதகமான நிலையை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்குமென ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள
நவனீதன் பிள்ளைக்கு சண்டித்தனம் காட்டாது, தம்மால் ஐ.நா. மனித உரிமை
மாநாட்டிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
விடயங்களின் உண்மைத் தன்மையை அவருக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கத்தில்
அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சியெடுக்க வேண்டுமென ஐக்கிய
தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க "ஸ்ரீலங்கா மிரர்"
க்கு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment