• Latest News

    August 27, 2013

    நவநீதம்பிள்ளையின் விஜயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    RawanaBalaya 410px 13 08 26
    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரரவையின் ஆணையாளர் நவீதன் பிள்ளையின் இலங்கைக்கான விஜயத்தினை எதிர்க்கும் வகையில்இ அமைச்சர் விமல் வீரவங்ச வழிநடத்தலில் இயங்கும் 'இராவணா சக்தி' அமைப்பு இன்று (26) முற்பகல் கொழும்பிலுள்ள ஐ.நா. கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

    என்றபோதிலும் ஐ.நா. அலுவலகத்திற்கு வழங்குவதற்காக மகஜர் ஒன்றையும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டுசென்றிருந்த போதிலும் அதனை பொலிஸார் தடுத்ததன் விளைவாக அவர்கள் கையளிக்கவிருந்த மகஜரை வழங்காது அமைதியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.

    மேலும்இ 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தனது உத்தியோகபூர்வ செயற்பாடுகளை இன்று முற்பகல் வேளையில் ஆரம்பித்ததுடன் முதலாவதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    அவருடனான சந்திப்பின் பின்னர் சட்டமா அதிபரையும் சந்திக்கவுள்ளார். மேலும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமையும் ஆணையாளர் நவனீதம் பிள்ளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நவநீதம்பிள்ளையின் விஜயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top