• Latest News

    September 17, 2013

    மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாற்றில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

    மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஏழாம் தரம் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. 
    வீட்டின் அருகில் உள்ள கொய்யா மரத்தில் இருந்தே குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.


    கோட்டைக்கல்லாறு முதலாம் வட்டாரம் பவான் வீதியைச் சேர்ந்த செ.கிரிசாந்த் (12 வயது)என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் செடலம் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாற்றில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top